நம்ம ரெண்டு பேரும் அண்ணண், தம்பி மாதிரி.. நீங்க தோத்தா நாங்களும் தோப்பம்.. அப்போ நம்ம ரெண்டு பேருக்கு மேட்ச் நடந்த வின் பண்ணுறது யாரு ?

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி முதல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் மொத்தமாக 20 லீக் போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் நடப்பு சம்பியனான (4 தடவைகள்) சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் 5 தடவைகள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் வரிசையாக 4 தோல்விகளை சந்தித்துள்ளன17வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சி.எஸ்.கே அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது இதேவேளை நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்கள10ர் அணியும் மோதின.

முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்கள10ர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது

Leave a Reply

Your email address will not be published.