தற்பொழுது உலகம் முழுவதும் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலமே ஆசிரியர்களும் மாணவர்களும் சந்தித்துக் கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது..

ஆன்லைன் வகுப்பின் மூலம் ஏற்பட்ட ஒரு காதலினால் ஆசிரியையும் மாணவனும் இணைந்து ஓடிய சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது..

இந்தநிலையில் பானிபட் நகரில் பன்னிரண்டாம் வகுப்பில் படித்து வந்த மாணவன் தனக்கு ஆன்லைன் கிளாஸ் எடுத்த ஆசிரியையுடன் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்..

அது குறித்த ஆசிரியை சில வருடங்களாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருவதாகவும் சமீப காலமாக ஆசிரியையும் குறித்த மாணவனும் ஆன்லைன் கிளாசை தாண்டி வாட்ஸ்அப் மூலமும் உரையாடி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள்.. இந்த காலத்தில் ஆசிரியை மாணவன் உறவு கூட காதலுக்கு தெரிவதில்லை போலும்..

வீட்டை விட்டு வெளியேறிய மாணவன் இந்தவிதமான பணம் நகை என்பவற்றை எடுத்துச் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..

தற்போது அவர்களுடைய மொபைல் போன் முழுமையாக துண்டிக்கப்பட்டு உள்ள நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..