நமது மூதாதையர்கள் உணவே மருந்து என்று சொல்வார்கள்.. அது என்னவோ உண்மைதான்..ஆனால் நாம் இந்தக் காலத்தில் வீட்டின் சமயல் அறைக்குள் மருந்தை வைத்துக்கொண்டு நோ ய்களை உடல் முழுவதும் சேர்த்துக்கொண்டு வைத்தியரை நோக்கி ஓடுகிறோம்..

பார்ப்பதற்கு சின்ன சின்ன கற்கள் போன்று கரடு முரடாக இருக்கும் ஒரு பொருள் தான் வெந்தயம்.. நம் உடலுக்கு பல தரப்பட்ட நன்மைகளை வெந்தயம் தர வல்லது என்பது நம்மில் பலருக்குத் தெரியாமல் உள்ளது..

எல்லாரின் வீட்டின் சமையல் அறையிலும் கட்டாயம் இடம்பெறும் ஒரு பொருளில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா என உங்களை ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு வெந்தயத்தில் பல்வேறு பயன்கள் உள்ளன..

தற்காலத்தில் பொதுவாக வயது வந்தோருக்கு ஏற்படுகின்ற ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து அவை ரத்தக்குழாய்களை அடைத்து இதயத்துக்கு செல்வதில் இடையூறு ஏற்படுவதன் மூலம் பல்வேறு இதய பிரச்சினைகள் மற்றும் மூளை பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகின்றது..

வெந்தயம் சாப்பிடுவது நமது இரத்த சர்க்கரை அளவை மட்டும் அல்லாது ரத்த க் கு ழாயில் படியும் கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்த உதவுகின்றது..

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதால் நமது வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை அதாவது அ சி டிட்டி இதிலிருந்து நாம் விடுபடலாம்..

வெந்தய விதைகளில் அதிகமான நார்ச்சத்து காணப்படுவதால் நமது செரிமானப் பிரச்சனைகளில் இருந்து விடுபட செய்கின்றது..

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி வெப்பத்தைத் தணிக்கும்..

அதிகமான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை இலகுவாக சீராக்கும்..

தற்காலத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை முடி கொட்டுதல்..இதற்கு பல்வேறு புறக் காரணிகள் காரணமாக இருந்தாலும் அதிகமான உடல் வெப்பம் காரணமாக இருக்கின்றது..வெந்தயம் சூட்டை தணிப்பதால் நமக்கு முடி கொட்டும் பிரச்சனை குறைந்து முடி கருமையாகவும் நீளமாகவும் வளரும்.

வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக அமைகின்றது..

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் தினமும் வெந்தயத்தை ஊறவைத்த நீரை குடித்து வந்தால் வயிற்றில் ஏற்படும் எரிவு குறைவதற்கு வாய்ப்புள்ளது..

பொதுவாக வெந்தயத்தில் கொழுப்புச் சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், தயாமின், நிக்கோடினிக் அமிலம் என பல்வேறு தாது பொருட்கள் காணப்படுகின்றன.

வெந்தயத்தில் அதிகமான கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் நமது செரிமானத்தின் வேகத்தை குறைத்து காபோவைதரேட்டு உணவுகளை உண்ணும்போது அதன் அளவையும் குறைக்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாகவே குறைந்து விடுகின்றது..