*பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.. அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு..*

நாடு முழுவதும் தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்..

14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயண கட்டுப்பாடு தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது..

ஆனால் 14ஆம் திகதி பயண கட்டுப்பாடு தளர்த்தப்படாது என சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன..எனினும் அதை ராணுவ தளபதி வதந்தி என நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

எனினும் சுகாதார துறையினர் இன் பரிந்துரைக்கு அமைவாக கட்டுப்பாடு நீடிக்கப்படும் முடிவை எடுத்ததாக முடிவு செய்ததாக ராணுவ தளபதி அறிவித்துள்ளார்..