வேலை என்பதை சிலர் இஷ்டப்பட்டு செய்தாலும் நம்மில் பலரும் அதைக் கஷ்டப்பட்டே செய்கிறோம். இன்னும் சொல்லப்போனால் வேலை குறித்து ரொம்பவே அழுத்துக் கொள்வதையும், அதுசார்ந்த முணங்கல்களையும் கேட்கமுடிகிறது. ஆனால் இன்னும் சிலரோ எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் மிக அசால்டாக டீல் செய்துவிடுவார்கள்.

அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான். ஒரு இளம்பெண் மிக, மிகக் கஷ்டமான வேலையை ரொம்பவே ரிலாக்ஸ்ட் மைண்ட் உடன் மகிழ்ச்சியாகப் பார்க்கிறார். அப்படி அந்தப்பெண் என்ன வேலை செய்தார் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். முதலைப் பண்ணை ஒன்றில் வேலை செய்து வருகிறார் அந்தப் பெண்மணி. அதிலும் அங்கு அவருக்கு என்ன வேலை தெரியுமா? முதலைகளுக்கு நேரத்துக்கு, நேரம் சாப்பாடுகொடுப்பது!

ஒரு பெரிய கண்ணாடி கூண்டு போன்ற நீர் நிறைந்த குண்டில் அவர் அசால்டாக கிளாஸை ஓப்பன் செய்கிறர். உள்ளே இருந்து முதலைகள் எட்டிப் பார்க்கிறது. தன் கையில் இருக்கும் நீளமான குச்சியில் இறைச்சியை எடுத்து அவர் முதலைகளின் வாயில் வைக்கிறார். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் ரொம்பவே ரிஸ்கான வேலைதான். ஆனாலும்கூட அதை அந்தப் பெண் சிரித்த முகத்துடன் ரொம்பவும் அசால்டாக டீல் செய்கிறார். இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்களேன்.